நடிகை திவ்யா மரணம்.. பரவி வரும் வதந்தி

By 
rd1

கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார்.

பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார். ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது.

இந்நிலையில், நடிகை திவ்யா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என்றும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 


 

Share this story