ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு : நடிகை கவுதமி புகார்
 

By 
gau1

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் ரூ.25 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கட்டுமான அதிபரான அழகப்பன் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் நிலத்தை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

இதற்கு உதவி செய்வதாக கட்டுமான அதிபர் அழகப்பன் கூறியதை தொடர்ந்து அவருக்கு அதிகாரம் வழங்கினேன். ஆனால் அவர் இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகப்பன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது.
 

Share this story