ஆப்கன் மக்கள், பாலைவனம் வழியாக தப்பிக்கும் காட்சிகள் :  மனதை வாட்டும் பேரவலம்

By 
 Afghan people, scenes of escape through the desert mind-boggling apocalypse

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாலைவனம் வழியாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பல நாடுகளின் மனதை கனக்கச் செய்கின்றன. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால், உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் பொதுமக்கள், தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக, ஈரான் நாட்டுக்கு தப்பி செல்கின்றனர். 

இங்கிருந்து அவர்கள் ஐரோப்பா செல்லலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆரம்ப இலக்கு துருக்கியாக இருக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஈரான் உள்ளது

பாலைவனங்கள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானின், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாய் அமைந்த பாலைவனம் நிம்ரூஸில் இருந்தே, இந்த பயணங்கள் தொடங்குகிறது.

கண்ணுக்கு எட்டியவரை மனிதத் தலைகளே தென்படுவதால், இதனைப் பேரவலம் என்று ஐரோப்பிய எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

Share this story