45 ஆண்டுகளுக்கு பிறகு, தாஜ்மகாலுக்குள் வெள்ளம் புகுந்தது; காஷ்மீரில் 8 பேர் உயிரிழப்பு..

By 
taj1

* டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இதற்கிடையே 45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மகாலுக்குள் புகுந்தது. தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. தாஜ்மகால் சுவரை தொட்டுக் கொண்டும் வெள்ள நீர் செல்கிறது.

* ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது. இதனால் சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கத்துவா மாவட்டத்தின் மேல்மட்ட பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
 

Share this story