91 நாளுக்குப் பிறகு, கொரோனா மேலும் குறைவு..முழுவிவரம்..
 

By 
After 91 days, the corona is even lower.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. 

பாதிப்பு குறைந்ததையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம் உயிரிழப்பு இறக்கமாக உள்ளது.

சுகாதார அமைச்சகம் :

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,167 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை தடுப்பூசிகள் :
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,62,521 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

நாடு முழுவதும் இதுவரை  28 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 201 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
*

Share this story