தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?

By 
bsp3

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ்(44). பிரபல ரவுடியான இவர் கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்தார். இவர் பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணன் மற்றும்  கடந்த 2010ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்ற வாசலில், மற்றொரு  கூலிப்படை கும்பலின் தலைவனான சின்னா கொடூரமாக கொலை செய்தார். அதேபோல கடந்த 2015ம் ஆண்டு பிரபல ரவுடி தென்னரசுவை, தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது மனைவி மைதிலியின் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் ரவுடி கும்பல் வெட்டி சாய்த்தது.

இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனையடுத்து மாதவனுடன் காரில் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவன் உணவகம் என்ற ஓட்டலுக்கு வந்தார். கடற்கரை மணலில் அமர்ந்து மது அருந்தி விட்டு ரவுடி சுரேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஆற்காடு சுரேஷை படுகொலை செய்துவிட்டு, தடுக்க வந்த மாதவனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். விசாரணையில் ரவுடி தென்னரசுவின் கொலைக்கு அவரது தம்பி பாம் சரவணன் பழிதீர்த்தது தெரியவந்தது. இந்த கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு  உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

பாம் சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும் காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை. இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியான மாதவனையும் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி அந்த கும்பல் வெட்டி சாய்த்தது.  

இந்நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பின்னால் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக ஆற்காடு சுரேஷ் தரப்பிற்கு சந்தேகம் எழுந்தது. ஆகையால் ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். சரியான நேரம் கிடைத்ததும் அவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Share this story