ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : நிர்வாக இயக்குனர் பரபரப்பு வாக்குமூலம்..

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் உள்ளட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அப்போது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர். இந்நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்ட மைக்கேல்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ரூ.1,749 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக்கணக்கு உரிமையாளருக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது.