படுகொலை செய்யப்பட்ட  ஆர்ம்ஸ்ட்ராங்..  அயனாவரம் கொண்டு செல்லப்படும் அவர் உடல் - கண்ணீர் மல்க பின்தொடரும் ஆதரவாளர்கள்..

By 
bsk6

மூத்த வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவருமான திரு ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் நின்று தனது சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். 

உடனடியாக அவரை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து அப்போலோ மருத்துவமனையில் அவரது வீட்டார் அனுமதித்தனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் மிகுந்தவாறு கொண்டு செல்லப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில், அவரை படுகொலை செய்த கும்பலை பத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக 11 பேரை தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஒரு ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாகத் தான் இந்த படுகொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுடைய உடல், தற்போது அயனாவரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வழி நெடுங்க அவருடைய ஆதரவாளர்கள் கூடி நின்று கோஷங்களை எழுப்பியவாறு சென்று வருகின்றனர். 

Share this story