முல்லை பெரியாறு அணை குறித்து, பாஜக கேள்வி : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

BJP question on Mulla Periyar Dam Minister Thuraimurugan's explanation

தமிழகம் சார்பில் எந்த அதிகாரிகளுமின்றி, முல்லை பெரியாறு அணையை திறந்தது முதலமைச்சருக்கு தெரியாதா, இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 

முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல், தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது. 

28-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததால், தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் 2 மதகுகள் திறக்கப்பட்டது.

கேரள அரசு அதிகாரிகள் தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்றது தவறான தகவல்  நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. 

மதகுகள் திறக்கப்படும் போது கேரள மந்திரி சில அதிகாரிகளுடன் உடன் இருந்து பார்வையிட்டார்கள். முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஒரு தோற்றம்  ஏற்பட்டுள்ளது.
உண்மைநிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அதிகாரிகள் மதகுகளை திறந்தது போல் செய்தி வெளியிட்டது தவறானது. 

இரு மாநிலங்களின் நலன் கருதி இதுபோன்றவை தவிர்க்கப்பட வேண்டும். 

முல்லைப்பெரியாறு அணை இயக்கத்தைப்பற்றி தவறான தகவலை வெளியிட்டது உள்நோக்கம் கொண்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story