சென்னையில் மாணவர்கள் இடையே மோதல் : கல்லூரிக்குள் வெடிகுண்டு வீச்சு..

By 
bomb5

வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர்.

இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Share this story