தொடர் புயல்மழை : 15 பேர் பலி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் புலம்பெயர்வு..

Continuing storm 15 killed, one lakh 20 thousand emigrated ..

சீனாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கே ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மாகாணத்தின் 76 கவுன்டி பகுதிகள் பாதிக்கப்பட்டன. 

17.6 லட்சம் பேர் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

1 லட்சத்து 20 ஆயிரத்து 100 பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த மழையால், 37 ஆயிரத்து 700 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.  

2.38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்தன.  

இதனால், 78 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில், தொடர்ச்சியான மழை பொழிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3 பேர் காணாமல் போயுள்ளனர்' என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

Share this story