கட்டுப்பாடு பகுதிகள், 5 மாவட்டத்தில் இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

By 
Control Areas, Not in District 5 Government of Tamil Nadu Notice

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு :

947 பகுதிகள் :

கொரோனா 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

கடந்த ஜூலை 9-ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

ஈரோடு :

அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

குறைந்தபட்சமாக, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது, அவை குறைந்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story