சென்னையில் கொரோனா 3-வது அலை? : எச்சரிக்கை தகவல்..

By 
Corona 3rd wave in Chennai  Warning information ..

தமிழகத்தில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியதில் இருந்து, தலைநகர் சென்னை பாதிப்புக்குரிய அதிக இலக்காக இருந்தது.  

இந்நிலையில், சென்னையில் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,38,326 ஆக உள்ளது.  5,28,333 லட்சம் பேர் குணமடைந்து விட்டனர்.

பாதிப்பு அதிகரிப்பு :

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.  

கொரோனாவுக்கு இதுவரை 1,675 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  8,318 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரம் தொட்டது.

இதன்பின்னர், சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்நது. 

மாத வாரியாக விவரம் :

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டனா்.

எனினும், 2-வது அலையால் மீண்டும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 5,000 பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஆனால், அதன் பிறகு தொற்று எண்ணிக்கை ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்கு கீழும், ஜூலை மாத மத்தியில் 200-க்கு கீழும் குறைய தொடங்கியது.

சென்னையில், கோடம்பாக்க மண்டலத்தில் அதிக அளவாக 51,965 பேர் குணமடைந்து உள்ளனர்.  மணலியில் குறைந்த அளவாக 7,937 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  

இதேபோன்று, பலியானோர் எண்ணிக்கையில் அண்ணாநகர் மண்டலம் அதிக அளவாக (962 பேர்) உள்ளது.

அதற்கு அடுத்து, தேனாம்பேட்டை (954), கோடம்பாக்கம் (933) மண்டலங்கள் உள்ளன.  குறைந்த அளவாக மணலியில் 77 பேர் பலியாகி உள்ளனர்.  

34,102 பேர் பலி் :

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 34,102 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 1,627 ஆக இருந்தது.  அதற்கு முந்தின தினம் (ஜூலை 31)
1,569 ஆகவும், ஜூலை 30ந்தேதி 1,508 ஆகவும் இருந்தது.  

இந்நிலையில், தொடர்ந்து உயர்வடைந்து, இன்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1,675 ஆக உயர்ந்து உள்ளது எச்சரிக்கை விடும்படி அமைந்துள்ளது.

Share this story