கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு : ஆஸ்பத்திரியில் அனுமதி...

Corona infection in Kamal Haasan Admission to hospital ...

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது : 

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின், லேசான இருமல் இருந்தது. 

பரிசோதனை செய்ததில், கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் கொரோனா தடுப்பூசி  போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(புகைப்படம்)

இதனைத் தொடர்ந்து, அவரது கட்சியினரும் ரசிகர்களும் கமல்ஹாசன் நலம் பெற்றுத் திரும்ப, அவரவர் உளமாரந்த விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
*

Share this story