4 நாடுகளுக்கு, மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி : மத்திய அரசு

Corona vaccine exports back to 4 countries Federal Government

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 113 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

ஏற்றுமதி :

பக்கத்து நாடுகளான பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது. 

எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது சமமாக இருக்க வேண்டும் என்ற ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் அடிப்படையிலும், நன் கொடையாகவும் ஏப்ரல் வரை 3 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

இதுதவிர, 26 நாடுகளுக்கு 3 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. 

கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்ததால், தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது.

மியான்மர், வங்காள தேசம், நேபாளம், ஈரான் ஆகிய 4 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கியது.

5 கோடி டோஸ் :

இதேபோல ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதல் தடுப்பூசி டோஸ் இந்த வாரத்திற்குள் சென்று அடையும் என்று சீரம் நிறுவனத்தை சேர்ந்த புனவல்லார் தெரிவித்தார்.

இதேபோல, சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இந்தோனேஷியாவுக்கு செல்ல உள்ளது. 5 கோடி டோஸ்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
*

Share this story