விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி : தமிழக கல்வித்துறை அறிவிப்பு
 

Date for Lecturer Examination Notice of Tamil Nadu Education Department


வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து வி‌ஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது :

தொழில்நுட்ப கல்விக்கான விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது. 

1,600 பதவிகளுக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள்.

12-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெறும். அந்தந்த மாவட்டங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. மற்ற தேர்வுகள் நடைபெறுவதால், இந்த தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து வி‌ஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். 

நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதற்கு ஏற்ப அரசு செயல்படும்' என்றார்.
*

Share this story