டெங்கு வராமல் தடுக்க முடியும்; எப்படி தெரியுமா? : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
 

By 
dengu

சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழைக்கால வியாதிகளான டெங்கு, வயிற்றுபோக்கு, டைபாய்டு பரவாமல் இருக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை உள்ளாட்சி துறைகள் இணைந்து கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்டறியும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை ஆகிய பணிகளை செய்து வருகிறார்கள்.

2972 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சல் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. 23 ஆயிரத்து 713 பணியாளர்கள் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உயிர்களுக்கும் மருந்துகள், ரத்தம் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவங்களான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலை சாறு ஆகியவையும் வழங்கப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் 4227 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது கடந்த ஆண்டுகளை விட குறைவுதான். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

Share this story