டெங்கு காய்ச்சல் பரவுகிறது : தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு, மத்திய சுகாதாரக்குழு வருகை

By 
Dengue Fever Spreads Central Health Committee visits 9 states including Tamil Nadu

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 

இதனையடுத்து, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. 

அதன்படி, முகாம்கள் நடத்தப்பட்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. 

இந்த குழு, 9 மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மொத்தம் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகபட்ச டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது. 

அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த டெங்கு நோயாளிகளில் 86 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகி உள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
*

Share this story