டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்
 

director shankar's daughter marries cricket team captain

பிரமாண்ட திரைப்பட இயக்குநரான ஷங்கர் வீட்டில் விசேஷம். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களையும் இயக்கியதோடு, மிகப்பெரிய வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இப்போது திருமணம்.

ரஞ்சி அணி கேப்டன் :

டாக்டரான ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை மணக்க இருக்கிறார். 

தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித். 

29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு, அதற்கு கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.

கிரிக்கெட் வீரர் ரோஹித்கிரிக்கெட் வீரர் ரோஹித்
நடப்பு சீசனில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித்.

27-ந்தேதி திருமணம் :

ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை 27- ந்தேதி அன்று மகாபலிபுரத்தில் நடக்க இருக்கிறது. 

சினிமாவில் பல கோடி ரூபாய்க்கு செட் போட்டே பிரபலமான ஷங்கர் மகள் திருமணத்துக்கும் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார். ‘2.0’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராஜ், ஷங்கர் மகள் திருமணத்துக்கும் செட் போட்டிருக்கிறார்.

Share this story