ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்
 

By 
Do not prevent people from leaving Afghanistan The nations of the world insist


ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின.

இதற்கிடையில் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ், வாழ விரும்பாத ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர்.

காபூல் விமான நிலையம் நோக்கி வரும் ஆப்கான் மக்களை தலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். அதனை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று, அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

Share this story