கொண்டாட்டங்களுக்கு காரணம் தேடாதீர்கள்; கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் - முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சாடல்..

By 
dmkbjp6

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலவர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்..

"தி.மு.க தனது நிர்வாகத் தோல்விகளை மறைத்து, மாநில மக்களுக்கு எந்த அக்கறையும் இல்லாத விஷயங்களைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டத்தில் நேற்று, INDIA கூட்டணி காட்சிகளை போல முதலவர் ஸ்டாலின் அவர்களும் பி.ஜே.பி மீது "தார்மீக வெற்றி" பெற்றுள்ளதாக பேசியுள்ளார். 

அரசியல் சானனத்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு காகிதமாக மட்டுமே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்த்து வருகின்றார். ஆனால் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதனை தனது தலையாய கடமையாக எண்ணி தான் கடந்த பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்றார். மேலும் இந்தியக் கூட்டணி மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களை அரசியலமைப்பின் முன் தலைவணங்க செய்துள்ளதாக கூறியுள்ளார். 

மோடியின் வாழ்க்கையைப் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையைப் பற்றியும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. ஆனால் INDIA கூட்டணிக்கு அரசியல் சாசனம் என்பது எப்பொழுது & எங்கு ஆட்சியில் இருந்தாலும் மிதிக்கக் கூடிய ஒரு துண்டு காகிதமே தவிர வேறில்லை.

தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணி, நாடு முழுவதும் உள்ள சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டமைப்பாகும். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இந்தத் தேர்தலில் பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கையை இன்னும் தாண்ட முடியவில்லை.

ஐ.என்.டி.ஐ கூட்டணியில் குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யை வைத்திருக்கும் 13 கட்சிகளும் மொத்தம் 232 இடங்களைக் கொண்டிருக்கின்றன, இன்னும் எங்கள் தனிக் கட்சியைக் கடக்க முடியவில்லை" என்றார்.
 

Share this story