ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் : 3 பேர் கைது

By 
hera

அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள் இருந்தது. அதில் 700 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் போதைப்பொருளை குவஹாத்தியில் இருந்து துப்ரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி 2.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story