இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த மார்க்கத்தில்? முழு விவரம்..

By 
etrain

இன்றும் நாளையும் 84 புறநகர் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இடையே நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர் மற்றும் திருத்தணி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்றிரவு 9.25, 10.25 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.20, 11.15 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல் இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர் மார்க்கெட் செல்லும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர் மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு மூர் மார்கெட் செல்லும் மின்சார ரயில்களும், ஆவடியில் இருந்து காலை 3.50, 4.00, 4.25, 6.10, 6.45, 9.15 மணிக்கு புறப்பட்டு மூர் மார்கெட் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 

காலை 4.10, 4.35, 6.00, 7.40, 7.55, 8.45 மணிக்கு ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர் மார்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

Share this story