விரைவு பஸ்களின் ஆயுட்காலம் 7 ஆண்டாக அதிகரிப்பு : தமிழக அரசு

By 
Express life extended by 7 years Government of Tamil Nadu

அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை, இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணை :

தமிழகத்தில், இதுவரை அரசு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதேபோல், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருந்தது. 

இந்நிலையில், அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களின் ஆயுட் காலத்தையும், கண்டம் செய்யும் ஆண்டுகளையும் உயர்த்தி உத்தரவிட்டு   தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு பஸ்கள் ஏற்கனவே 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

நவீன வடிவமைப்பு :

தமிழகம் முழுவதும் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நவீன தொழில்நுட்பம் கொண்ட பஸ்களும் விடப்பட்டுள்ளன. 

அரசு பஸ்களின் நவீன வடிவமைப்பு காரணமாக, அதன் ஆயுட் காலத்தை உயர்த்தி போக்குவரத்து துறைச் செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

Share this story