சிறுமி பாலியல் பலாத்காரம் : சினிமா டைரக்டர் கைது..

By 
arre

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்தவர் ஜாசிக் அலி(36). இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக உள்ளார். மலையாளத்தில் பைனரி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த மே மாத இறுதியில் வெளியானது.

இந்நிலையில் ஜாசிக் அலி, கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமியை கதாநாயகியாக்குவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். சிறுமியும் சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டும் என கூறி சிறுமியை ஜாசிக் அலி கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சென்ற இடங்களில் எல்லாம் விடுதிகளில் அறை எடுத்து தங்க வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி உள்ளார். பின்னர் தாயார் உதவியுடன் கோயிலாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கோயிலாண்டி போலீசார் தீவிரமாக தேடத்தொடங்கியதை அறிந்த இயக்குனர் ஜாசிக் அலி தலைமறைவானார். இந்நிலையில் நடக்காவு பகுதியில் உள்ள வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார், ஜாசிக் அலியை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்த பெண் 18 வயது நிறைவடையாத பெண் என்பதால் இயக்குனர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this story