மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து : 5 பேர் கைது
Aug 28, 2023, 16:17 IST
By

மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.