லேப்டாப், கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம் : பிரதமர் மோடி பேச்சு

By 
comp3

பிரதமர் மோடி இன்று 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர்களிடம் காணொலி மூலம் வழங்கிய அவர் பின்னர் பேசியதாவது:-

உள்ளூர் வேலைவாய்ப்பு, தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும், அரசுகள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தப்படும். இதே நாளில் நாம் ஜன் தன் யோஜனா திட்டத்தை 9 வருடத்திற்கு முன் கொண்டு வந்தோம்.

நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. உணவில் இருந்து மருந்தகம், விண்வெளியில் இருந்து ஸ்டார்ட்அப்ஸ் என அனைத்து துறைகளும் எந்தவொரு பொருளாதாரம் வளர்வதற்கு அவசியமானது. 2030-க்குள் சுற்றுலாத் துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பங்களிக்கும்.

இதில் 13 முதல் 14 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோமொபைல்ஸ், மருத்துவ துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் காலங்களில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த 10 ஆண்டுகளில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். நான் இந்த உறுதியை கொடுக்கும்போது, அதற்கான முழு பொறுப்பும் எனக்கு உண்டு. அதை நான் செய்வேன்.

நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளைத் திறக்க துணை ராணுவப் படைகளுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


 

Share this story