தீபாவளிக்காக, 16,540 பஸ்கள் இயக்கம் : போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பாடு

For Deepavali, 16,540 buses will be in operation Transport Department special arrangement

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 
* தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்.

* சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும்.

* சுங்கச்சாவடிகளில், அரசு பேருந்துகளுக்கு தனி வழி.

* ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

* தீபாவளி பண்டிகை முடிந்து, மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

* ஆயுத பூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன' என்றார்.

Share this story