லடாக்கில் நிறுவப்பட்டது, உலகின் மிகப்பெரிய தேசிய கொடி
 

By 
Founded in Ladakh, the world's largest national flag

உலகின் மிகப்பெரிய கதர் துணியிலான தேசியக்கொடி லடாக்கில் உள்ள லே நகரில் நிறுவப்பட்டது. 

ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம்  தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்டன. இன்று காலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், ராணுவ முதன்மை தளபதி மனோஜ் முகுந்த் நரவணே  ஆகியோர் பங்கேற்றனர். 

லடாக்கில் நிறுவப்பட்ட தேசியக் கொடி 225 அடி நீளமும் 150 அடி அகலமும் உடையது. இதன் எடை 1000 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். 

ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.

Share this story