ஏடிஎம் மையத்தில், கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளை : 4 பேர் கைது

By 
rob2

ஐதராபாத் அருகே, ஏடிஎம் மையத்தில் பணத்தை டெபாசிட் செய்தவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஹிமாயத் நகர் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையத்தில், கடந்த 3ம் தேதி பணத்தை டெபாசிட் செய்துகொண்டிருந்த நபரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.

மேலும் அவரை பலமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரை ஐதராபாத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். 



 

Share this story