அரசுப் பணியில், சிலம்பாட்ட வீரர்களுக்கு இட ஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

Reservation for Silampatta players in government service Government of Tamil Nadu Announcement

'தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில், சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்' என சட்டசபையில் அரசு அறிவித்தது. 

சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

தேசிய மற்றும் மாநில அளவில், சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். 

மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Share this story