திருச்சி ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை.! - காட்டுக்குள் நடந்த அதிரடி ஆக்‌ஷன்..

By 
enc

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் வனப்பகுதியில் பிரபல ரவுடி துரைசாமியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரைசாமி பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் ஆலங்குடி வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்படி திருவங்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற போலீசார் ரவுடி துரைசாமியை சுற்றி வளைத்தனர். காவல்துறையினரைக் கண்டதும் துரைசாமி தப்பி ஓட முயன்றதாகவும் விரட்டிப் பிடிக்க முயன்ற காவலர்களை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், போலீசார் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக துரைசாமியை என்கவுண்டர் செய்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியசால் சுட்டப்பட்ட துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Share this story