'லியோ' சினிமா சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

By 
high court

லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 19ஆம் தேதி 6 காட்சிக்கு அனுமதி கேட்ட நிலையில், 5 காட்சிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன எனவும், ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னைக்கு மாற்றியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி அனிதா உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Share this story