அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
 

By 
Heavy rains 'Red alert' for 3 districts in Tamil Nadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

அதி கனமழை :

28-ந் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

29-ந் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும், 

தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும்.

30-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். 

31-ந் தேதி கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை :

சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகன மழை பெய்யக்கூடிய ஒரு சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக மழை பெய்யும். கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 7 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டருக்குள் மேலாக மழை பெய்யும். 

அதி கனமழை பெய்யக்கூடிய இடங்களை ‘ரெட் அலர்ட்’ என்று குறிப்பிடுகிறோம்' என்றார்.

Share this story