உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன் : நடிகர் சத்யராஜ் பேச்சு

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94) கடந்த மாதம் 11ம் தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்யராஜ்க்கு ஆறுதல் கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்களாக துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்தது ஆறுதலாக உள்ளது.
சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன். எதிர்ப்புக்கு பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.