நாளை பள்ளிகள் திறப்பதற்கு, ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு
 

By 
Icord bans school reopening tomorrow


தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இந்நிலையில், தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு, அம்மாநில ஐகோர்ட்டு  இடைக்கால தடை விதித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என கூறியுள்ளது. 

அக்டோபர் 4-ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்து, ஆப்லைன் வகுப்புகளை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, நேரடி கற்பிக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Share this story