முறைகேடான நிதி முதலீடு : பட்டியலில் சச்சின் பெயர்

 Illegal financial investment Sachin's name on the list

கறுப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில், சொத்துகளை வாங்கிக் குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்று உள்ளது. 

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான 3 மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி தெண்டுல்கர் கேட்டுக் கொண்டதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த முறைகேடான நிதி முதலீடு அறிக்கையை தயாரித்த அமைப்பு தெண்டுல்கரின் வக்கீலிடம் கேட்டனர். 

அவரது வக்கீல் இது தொடர்பாக கூறும்போது, 'தெண்டுல்கரின் முதலீடு சட்டப்பூர்வமானது. வரி அதிகாரிகளிடம் இது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

நிரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. 

பிரபல பாப் இசை பாடகி ‌ஷகிரா மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா ஷிபர் உள்ளிட்ட பிரபலங்களின் பெயரும் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Share this story