மிரட்டும் வில்லனாக புத்தெழுச்சியாய் வருகிறேன்.! - இயக்குனர் ரவி மரியா வாய்ஸ்.. 

By 
rm1

மீண்டும் மிரட்டும் வில்லனாக 'கான்ஸ்டபிள் நந்தன் ' படத்தில் நடிக்கவிருக்கிறேன்' என்றார் புத்தெழுச்சியாய் ரவி மரியா. இது குறித்த விவரம் வருமாறு:  

கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கும் படம் கான்ஸ்டபிள் நந்தன். சங்கர் புரொடக்‌ஷன்  சார்பில், டி. சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பூபால நடேசன் தெரிவிக்கையில், 

சசிகுமார், சுந்தர் சி, களஞ்சியம், உள்ளிட்ட இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றினேன். 15 வருடப் போராட்டத்திற்கு பிறகு, இயக்குனர் ஆகியுள்ளேன். திருவண்ணாமலையில் தொடக்க விழா நடந்து, ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் டெக்னீசியன்கள் தேர்வு நடைபெறுகிறது. 

எனது நண்பர் ஒருவர் கான்ஸ்டபிள். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில், கான்ஸ்டபிள் நந்தனாக நடிக்கும் யோகி பாபுவின் கேரக்டர் கருணையின் உச்சமாக இருக்கும்.

அதேபோல், மிருகத்தனத்தின் உச்சமாக.. ரவி மரியா கேரக்டர் அமைந்திருக்கும். இப்படம், எமோஷனல் டிராமா ஜானரில் உருவாகும் கதை. எனவே, எமோஷனலான யோகி பாபுவை இதில் பார்க்கலாம்' என்றார்.

இது குறித்து, இயக்குனர் மற்றும் நடிகருமான ரவி மரியா கூறியதாவது : 

வெயில், ஜெயில், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், சண்டை, பழனி போன்ற படங்களில் வில்லனாக நடித்தேன்.

இதனைத் தொடர்ந்து, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன், கூர்கா, காட்டேரி, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் காமெடி வில்லனாக நடித்தேன்.

தற்போது, மீண்டும் மிரட்டும் வில்லனாக 'கான்ஸ்டபிள் நந்தன் ' படத்தில் நடிக்கவிருக்கிறேன்' என்றார் புத்தெழுச்சியாய் ரவி மரியா.

Share this story