கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

By 
rain7

தமிழகம் முழுவதும் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கின்ற நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கேரளா மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வந்தது. அதன்படி கிழக்கு திசையின் காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் மிதமானது முதல், அதி கனத்த மழையை அடுத்த 48 மணி நேரத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்த 18 மணி நேரம் முதல் 36 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை நவம்பர் 14ஆம் தேதி வாக்கில் உருவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆகவே இதனை அடுத்து நாளையும் நாளை மறுநாளும் (நவம்பர் 14 மற்றும் 15) தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும்  செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story