டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

By 
tnpsc2

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.  சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வை எழுதிய பலரும் பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. இலக்கணப் பகுதி கடினமாக இல்லை என்றும், பொது அறிவு சார்ந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=e3561976-cea2-4f11-bda8-0911fce6b16e என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம்.

Share this story