சென்னையில், 24 மணிநேரத்தில் : வானிலை மையம் புதிய தகவல்

By 
Chennai rain in 24 hours Meteorological Center New information

சென்னையில், கடந்த 1-ந்தேதியில் இருந்து தற்போதுவரை 77 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

கனமழை :

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா வடதமிழகம் கடற்கரை பகுதியில், சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும்.

சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.  

வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 54 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. 

தரைக்காற்று :

சென்னையில், கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை 77 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை. கரையை கடக்கும்போது, 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்' என்றார்.

Share this story