சென்னை ஸ்டார் ஹோட்டலில், இளம்பெண்ணுடன் போதை வாலிபர் நிர்வாணமாக சுற்றியதால் பரபரப்பு..

By 
drun

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி உற்சாகமாக இருந்த அந்த வாலிபர் திடீரென காதலியை மட்டும் அறையில் அமர வைத்துவிட்டு வெளியில் வந்தார். உடலில் ஒட்டு துணிகூட இல்லாமல் காணப்பட்ட அந்த வாலிபா் நிர்வாணமாக ஓட்டல் வளாகத்துக்குள் சுற்றினார்.

ஓட்டலில் இருந்த மற்ற அறைகளுக்குள் அத்து மீறி புகுந்த அவர் அங்கிருந்த பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முன்னால் போய் கூச்சமின்றி நின்றார். ஓட்டலில் தங்கியிருந்த பெண்கள் "அய்யோ... இது என்ன கொடுமை" என்று கூறிய படியே அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டல் நிர்வாகத்தினர் மற்றும் ஓட்டலில் தங்கி இருந்த மற்ற ஆண்கள் போதையில் ஆட்டம் போட்ட வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்டதால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கூட அவரால் உணர முடியவில்லை. யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் இருந்த அந்த வாலிபரை ஒரு வழியாக ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டலுக்கு போலீசாரும் விரைந்து சென்றனர். அவர்களிடம் நிர்வாண போதை வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில் போதை வாலிபர் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் என்பது தெரிய வந்தது. காதலியுடன் 2 நாட்களுக்கும் மேலாக நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மதுகுடித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உச்சக்கட்ட போதையில் அப்படியே வெளியில் வந்து பெண்களை அச்சுறுத்தி ஓடவிட்டதும் விசாரணையில் அம்பலமானது. போதை வாலிபரின் இந்த நிர்வாண கலாட்டா சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Share this story