டெல்லியில், 144 தடை உத்தரவு : மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை.. 

By 
riv1

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் நிர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த பல பம்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 

Share this story