தமிழகத்தில், 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு.?
 

By 
In Tamil Nadu, Plus-2 exam results on the 19th.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக, பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

10-ம் வகுப்பு தேர்வில் 50% 11-ம் வகுப்பில் 20% 12-ம் வகுப்பு செய்முறை தேர்வில் 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயாராக உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

+2 மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this story