தமிழகத்தில், நாளை பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

By 
In Tamil Nadu, schools will open tomorrow Important announcement for students

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. முதலாவதாக, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும்.
 
இதுவரை இருந்தது போல் அல்லாமல், பள்ளிக்கூடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும். வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். 

பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பியதுமே, அவர்களுடைய ஆடைகளை துவைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

* ஒரு முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கூடுதல் முகக்கவசத்தை தேவைக்காக பைக்குள் வைத்து இருக்க வேண்டும்.

* முகக்கவசம் அணிவதுடன் கண்ணாடி கவசத்தையும் அணிந்து இருக்க வேண்டும். சாப்பிடும்போது மட்டுமே அவற்றை அகற்ற வேண்டும்.

* கைக்குட்டை அல்லது துடைக்கும் தாள் போன்றவற்றை வைத்து இருக்க வேண்டும்.

* சிறிய சானிடைசர் பாட்டில் ஒன்றையும் எடுத்து வரவேண்டும்.

* தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சொந்தமாக எடுத்து வர வேண்டும். மற்றவர்களுடன் பகிரக்கூடாது.

* பயன்படுத்திய முகக்கவசத்தை போடுவதற்கு தேவைப்பட்டால் ,தனி பை எடுத்து வரவேண்டும்.

* மாணவிகள் அதிகளவில் தலைமுடி வளர்த்து இருந்தால் அவை முகத்தில் படாதவாறு, கட்டி இருக்க வேண்டும்.

* முகத்தை தொடக்கூடாது.

* பள்ளிகளில் இருக்கும்போது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* ஒன்றாக அமர்ந்து எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடாது.

* எந்த பொருட்களையும் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது.

* பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.

* ஒரு மீட்டர் இடைவெளியை வகுப்பறை மற்றும் மற்ற இடங்களில் பின்பற்ற வேண்டும்.

* வகுப்பு இடைவெளி மற்றும் ஓய்வு நேரத்தை வகுப்புக்கு வகுப்பு மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலையை தினமும் பரிசோதனை செய்து தகவல்களை சேகரித்து வைப்பதற்காக கல்வித்துறை சார்பில், தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல், வகுப்புகளை நடத்த வேண்டும். 

அவர்களுக்கு மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் கல்வித்துறை கூறியிருக்கிறது.
*

Share this story