தென்காசி மாவட்டத்தில், 8 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்..

By 
tenkasi1

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் வருகிற (செப்டம்பர்) 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.

இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுமைக்கும் இன்று மாலை 6 மணி முதல் 21-ந்தேதி முற்பகல் 10 மணி வரை மற்றும் 30-ந்தேதி மாலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 10 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த நேரங்களில், அனைவரும் கூட்டமாக செல்லாமல் 4 பேர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Share this story