மாணவர்கள்-ஆசிரியர்கள் நலன் கருதி, 16-ந்தேதி விடுமுறை : கல்வித்துறை அறிவிப்பு

In the interest of students-teachers, 16-day holiday Academic Notice

தமிழகத்தில், மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி, அக்.16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 14,15 ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை மற்றும் அவர்களின் நலன்கருதி, வருகின்ற 16-ம் தேதி சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் , 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், வார இறுதி நாளான 16.10.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது "என்று தெரிவித்துள்ளார்.

Share this story