தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Increase in murder and robbery in Tamil Nadu O. Panneerselvam charge

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைகளை வழங்கினார். 

அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்திருப்பதாக தெரிவித்தவர், எனவே, உள்ளாட்சித் தேர்தலில் உத்வேகத்தோடு செயலாற்றி வெற்றி பெற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

Share this story