ஒமைக்ரான் வைரஸ் வர வாய்ப்புள்ளதா? : நிபுணர்கள் விளக்கம்
*

By 
Is the Omicron virus likely to come  Experts Description

ஒமைக்ரான் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம். 3-வது அலை வர வாய்ப்பில்லை என்று பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொற்று நோயியியல் நிபுணரும், சுகாதார அமைப்புகளின் நிபுணருமான டாக்டர் சந்திரகாந்த் லகாரியா இது தொடர்பாக கூறியதாவது :

அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்களை உள்ளடக்கிய சோதனை அதிகரிப்பால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. 

இதுவரை கிடைக்கப்பட்ட மாறுபாடு பற்றிய தகவலின் அடிப்படையில் மக்கள் பீதி அடைய தேவையில்லை.

3-வது அலைக்கு இப்போது சாத்தியமில்லை. சில மாவட்டங்களில், பரிசோதனைகள் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு உயரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒமைக்ரான் பரவல் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை' என்றார்.

சுகாதார பொருளாளர் நிபுணர் ரிஜோ எம்.ஜான் கூறும்போது, ‘இந்த நேரத்தில் தேசிய அளவில் பாதிப்பு அதிகரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 3-வது அலை இதுவரை இல்லை’ என்றார்.
*

Share this story