9 மாவட்டங்களில் மழை வருது, மழை வருது..எச்சரிக்கைத் தகவல்..

In 9 districts Rain is coming, rain is coming..Warning information ..

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற 8-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்.
 
கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி வரை கனமழை தொடரும் என கூறியுள்ளது.
*

Share this story